
Monday, March 23, 2009
Sunday, March 1, 2009
song : rAman ANdAlum rAvaNan ANdAlum
film : muLLum malarum
singers : SPB
music : IR
lyrics: Kannadhasan
ராமன் ஆண்டாலும் .. ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா அ! வெள்ளியில் கூஜா!
நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்
கேக்குற வரத்தைக் கேட்டுக்கடா!
( ராமன் ஆண்டாலும் .. ராவணன் ஆண்டாலும் )
ஆனையைக் கொண்டாங்க குதுரைய கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கணும் தோரணமாக
ஏண்டா டேய் ராணியக் கூப்பிடு அவளொட சேடியக் கூப்பிடு
ஏ! மதுரை ராஜ்ஜியம் என்னுது ஒனக்கொரு பாதியை கொடுக்கிறேன்டா!
( ராமன் ஆண்டாலும் .. ராவணன் ஆண்டாலும் )
பொன்னாப் பூப்பூத்து வைரம் காயாகும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும் லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சிக் காட்டுறேன் மனசிருக்கு பொழைச்சி பாக்குறேன்
ஏ போனா போகுது வேலை உனக்கொரு வேலையக் கொடுக்கிறண்டா!
( ராமன் ஆண்டாலும் .. ராவணன் ஆண்டாலும் )
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்லா வாழ நீதான் நேர் வழி காமி !
சாதி சனம் ஒண்ணாகச் சேர்ந்தது சாமிய தான் எல்லொரும் கேட்டது
நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியைப் பார்த்து கேட்டுக்கடா!
( ராமன் ஆண்டாலும் .. ராவணன் ஆண்டாலும் )


